• Nunc tincidunt, elit non cursus euismod, lacus augue ornare metus, egestas imperdiet nulla nisl quis mauris. Suspendisse a pharetra urna. Morbi dui ...

  • Nunc tincidunt, elit non cursus euismod, lacus augue ornare metus, egestas imperdiet nulla nisl quis mauris. Suspendisse a pharetra urna. Morbi dui le...

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
நமதூர் செய்திகள்
நமதூர் செய்திகள்

all[OneRight]

நமதூர் செய்திகள்
நமதூர் செய்திகள்

Style4

all

நமதூர் செய்திகள்

முறிகள் விநியோக விவகாரம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தொழில்சார் ரீதியான அறிக்கையொன்றையே சமர்ப்பித்துள்ளதாக பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் அம்பன்வல குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு கட்சிக்கோ அல்லது குழுவினருக்கோ பக்கச்சார்பான முறையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே சம்பந்தப்பட்ட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்றும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறிகள் விநியோகம் தொடர்பிலான சகல விடயங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொது மக்களின் பண பயன்பாடு தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக என்ன நேர்ந்துள்ளது அல்லது எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விடயங்களை முழுமையாக ஆராய்ந்து தொழில்சார் ரீதியாக கணக்காய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதி கணக்காய்வாளர் நாயகம் தெளிவுபடுத்தினார்.
கணக்காய்வாளர் நாயகம் பக்கச்சார்பின்றி சுயாதீனமான தொழில்சார் ரீதியில் சமர்ப்பித்துள்ள முறிகள் விநியோகம் தொடர்பான அறிக்கைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு நியாயம் கிட்டாதபட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் அம்பன்வல மேலும் கூறினார்.
இதேவேளை, முறிகள் விநியோக மோசடி குற்றச்சாட்டிலிருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை விடுவிக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வாளரின் அறிக்கை தொடர்பில், கோப் குழு செயற்படுகின்ற விதம் குறித்து அரசியல்வாதிகள் மத்தியிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமக்கு சாதகமான முறையில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவருக்கு அழுத்தம் விடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார கூறியுள்ளார்.
உண்மையை மூடிமறைப்பதற்காக கோப் குழுவில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளை கடும் வெறுப்புடன் கண்டிப்பதாக ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கோப் குழுவில் ஐக்கிய தேசிய கட்சியினர் நடந்துகொண்ட விதம் வெறுக்கத்தக்கதாகும் என இலங்கை சமசமாஜ கட்சியின் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி கடைப்பிடிக்கும் நடைமுறையை மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

Top