• Nunc tincidunt, elit non cursus euismod, lacus augue ornare metus, egestas imperdiet nulla nisl quis mauris. Suspendisse a pharetra urna. Morbi dui ...

  • Nunc tincidunt, elit non cursus euismod, lacus augue ornare metus, egestas imperdiet nulla nisl quis mauris. Suspendisse a pharetra urna. Morbi dui le...

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
நமதூர் செய்திகள்
நமதூர் செய்திகள்

all[OneRight]

நமதூர் செய்திகள்
நமதூர் செய்திகள்

Style4

all

நமதூர் செய்திகள்

வட் வரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

வட் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவானது என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு பொருட்கோடல் வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்மானத்தை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் பிற்பகல் ஒருமணியளவில் கூடியபோதே பிரதி சபாநாயகர் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

வட் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவானது என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு பொருட்கோடல் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின்...

ஆணமடுவயில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகன் கைது

வாகன விபத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு ஏழு மணியளவில் ஆணமடுவயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஜீப் ஒன்றுடன் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளதுடன் ஜீப்பை செலுத்தியவரெ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளள்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வாகன விபத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏழு மணியளவில் ஆணமடுவயில்...

முறிகள் விநியோக விவகாரம் தொடர்பில் தொழில்சார் ரீதியான அறிக்கை சமர்ப்பிப்பு

முறிகள் விநியோக விவகாரம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தொழில்சார் ரீதியான அறிக்கையொன்றையே சமர்ப்பித்துள்ளதாக பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் அம்பன்வல குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு கட்சிக்கோ அல்லது குழுவினருக்கோ பக்கச்சார்பான முறையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே சம்பந்தப்பட்ட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்றும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறிகள் விநியோகம் தொடர்பிலான சகல விடயங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொது மக்களின் பண பயன்பாடு தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக என்ன நேர்ந்துள்ளது அல்லது எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விடயங்களை முழுமையாக ஆராய்ந்து தொழில்சார் ரீதியாக கணக்காய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதி கணக்காய்வாளர் நாயகம் தெளிவுபடுத்தினார்.
கணக்காய்வாளர் நாயகம் பக்கச்சார்பின்றி சுயாதீனமான தொழில்சார் ரீதியில் சமர்ப்பித்துள்ள முறிகள் விநியோகம் தொடர்பான அறிக்கைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு நியாயம் கிட்டாதபட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் அம்பன்வல மேலும் கூறினார்.
இதேவேளை, முறிகள் விநியோக மோசடி குற்றச்சாட்டிலிருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை விடுவிக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வாளரின் அறிக்கை தொடர்பில், கோப் குழு செயற்படுகின்ற விதம் குறித்து அரசியல்வாதிகள் மத்தியிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமக்கு சாதகமான முறையில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவருக்கு அழுத்தம் விடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார கூறியுள்ளார்.
உண்மையை மூடிமறைப்பதற்காக கோப் குழுவில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளை கடும் வெறுப்புடன் கண்டிப்பதாக ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கோப் குழுவில் ஐக்கிய தேசிய கட்சியினர் நடந்துகொண்ட விதம் வெறுக்கத்தக்கதாகும் என இலங்கை சமசமாஜ கட்சியின் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி கடைப்பிடிக்கும் நடைமுறையை மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முறிகள் விநியோக விவகாரம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தொழில்சார் ரீதியான அறிக்கையொன்றையே சமர்ப்பித்துள்ளதாக பிரதி கணக்காய்வாளர் நாயகம் ல...

ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக மது அருந்தும் பெண்கள்: ஆய்வில் தகவல்

உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1891 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டுக்கிடையேயான காலகட்டத்தில் பிறந்த 40 இலட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்கள் தான் அதிகம் மது அருந்தி உடல்நலப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் சாத்தியக்கூறு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
ஆனால், தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறைய குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1900 களின் முற்பகுதியில் பிறந்தவர்களில், ஆண்கள் பெண்களைவிட இரட்டிப்பு மடங்குக்கும் மேல் ( 2.2 மடங்கு) மது அருந்தும் சாத்தியம் இருந்தது.
ஆண்கள் பிரச்சனைக்குரிய அளவில் மது அருந்துவது பெண்களை விட மும்மடங்கு அதிகம்.
கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட 3.6 மடங்கு அதிகம்.
ஆனால், தொடர்ந்து வந்த தசாப்தங்களில், இந்த இடைவெளி குறைந்தது. எனவே 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஆண்கள் பெண்களைவிட மது அருந்துவது 1.1 மடங்கு மட்டுமே அதிகம்.
பிரச்சினைக்குரிய அளவில் குடிப்பது என்பது 1.2 மடங்கு மட்டுமே அதிகம்.
குடிப்பழக்கத்தால் உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படுவது 1.3 மடங்கு மட்டுமே அதிகம்.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகக் குழு உலகெங்கிலும் இருந்து வந்த தரவுகளை ஆய்வு செய்தது. ஆனாலும், இந்தத் தரவுகள் பெரும்பாலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து கிடைத்த தகவல்களையே சார்ந்துள்ளன.

உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 1891 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்ட...

உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் பின்னரான தற்போதைய சூழலில், இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் அமைதிகாக்க வேண்டுமென, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் கட்டளையை மீறி இரண்டு இளைஞர்களும் பயணித்தமையால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்குமானால்,
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆகக்குறைந்த பலப்பிரயோகம் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவதாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீதவான் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நம்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இனியேனும் நடைபெறாமல் செயற்பட வேண்டியது அனைவரதும் கடமையாகும் என முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் பின்னரான தற்போதைய சூழலில், இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் அமைதிகாக்க வேண்டுமென, வட மாகாண...


Top